புத்தாண்டையொட்டி மதுரை கோயில்களில் குவிந்த பக்தர்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர் சுப்ரமணிய ஸ்வாமிக்கு தங்க கவசம் அணிவிக்கபபட்டது.;
புத்தாண்டு தினத்தில் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.
ஆங்கில புத்தாண்டு (01.01.22) தினத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் கோயிலில் மூலவர் சுப்ரமணிய ஸ்வாமிக்கு தங்க கவசம் அணிவிக்கபபட்டது. மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் . தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளது. புத்தாண்டு தினத்தையொட்டி, மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர் .மேலும், ஐயப்ப பக்தர்கள் வருகையால் கோயிலில் பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது
.