மதுரை மாநகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்: மேயர் நேரில் ஆய்வு

நல வாழ்வு மையங்கள், அங்கன்வாடி ,சத்துணவு மையம் ,கூடுதல் வகுப்பறை, சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன;

Update: 2023-06-17 10:45 GMT

மதுரை மாநகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகள் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.95, 97 மற்றும் 100 ஆகிய வார்டுப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, மேயர் இந்திராணி பொன்வசந்த்  ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் இன்று (17.06.2023) ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை மாநகராட்சியின் சார்பில், வளர்ச்சித் திட்டப் பணிகளாக, நல வாழ்வு மையங்கள்,  அங்கன்வாடி மையங்கள்,சத்துணவு கூடங்கள், பள்ளி கூடுதல் வகுப்பறைகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண்.95 திருநகர் நேதாஜி ரோடு மற்றும் சௌபாக்கிய நகர் பகுதியில் மழைநீர் வடிகால்கள் தூார்வர்ரும் பணி, சாலைப்பணிகள், மின்விளக்கு உள்ளிட்ட பணிகள் குறித்தும், வார்டு எண்.99 பாலாஜி நகர் பகுதியில் அம்ரூத் குடிநீர் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு லோயர்கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், அப்பகுதியில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தூய்மைப் படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுமாறும் வார்டு எண்.97 திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் , ஆக்கிரமிப்பு அகற்றுதல்,

மழைநீர் வடிகால்கள், கூடுதல் தெருவிளக்கு வசதிகள், பூங்காக்கள் பராமரிப்பு, கிரிவலப்பாதை மற்றும் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதிகளை அழகுப்படுத்துதல், பேருந்துகள் எளிதில் வந்து செல்வதற்கு தேவையான இடவசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு, மேயர் ஆணையாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்கள்.

தொடர்ந்து, வார்டு எண்.100 அவனியாபுரம் அங்கம்மாள் ஊரணி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஊரணியை தூார்வாரும் பணிகள், சுற்றுப்புறங்களில் மரங்கள் நடுதல், நடைபாதைகள் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், தேவையான மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தி ஊரணியை அழகுப்படுத்தி அப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் விரைந்து பணிகளை மேற்கொள்ளுமாறு கூறினார்கள்.

அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பதிவேடு, மருந்து மாத்திரைகள் இருப்பு பதிவேடு, வருகை பதிவேடு, சுகாதார வசதி, குடிநீர் வசதி, நோயாளிகள் காத்திருக்கும் அறைகள், மருத்துவர் அறைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தனி இடம் ஒதுக்கி மருத்துவ சேவை அளிக்குமாறும், கர்ப்பிணி தாய்மார்களை நகர சுகாதார செவிலியர்கள் தொடர்ந்து கண்காணித்து மருத்துவ சேவையினை வழங்கிடுமாறு அறிவுறுத்தினார்கள்.

மேலும், வார்டு எண்.100 அவனியாபுரம் சந்தோஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள், தெருவிளக்குகள், சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டனர். அவனியாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணி மற்றும் திருப்பரங்குன்றம் ரோடு பழங்காநத்தம் பகுதியில் அம்ரூத் குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டு வரும் பணியினை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் சுவிதா தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், மாநகர் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர்கள் முனீர்அகமது, இந்திராதேவி, உதவிப் பொறியாளர்கள் பாலமுருகன், செல்வவிநாயகம் மாமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, கருப்பசாமி சிவசக்தி, சுகாதார அலுவலர் விஜயகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News