மதுரையில் நடைபெறும் வளர்ச்சித்திட்டப் பணிகள்: உயர் அலுவலர்கள் ஆய்வு

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை ஆய்வு செய்தனர்

Update: 2022-09-23 17:15 GMT

மதுரை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் முன்னிலையில்,மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சியில் நடைபெறும் வளர்ச்சித்திட்டப்பணிகளை  மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் முன்னிலையில்,மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/அரசு முதன்மை செயலாளர் சந்திர மோகன்  ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி, அனுப்பானடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.மாநகராட்சி ஆணையாளர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News