மதுரைக்கு வந்த ரயிலில் முன்பு தொங்கிய நிலையில் சடலம்!
மதுரைக்கு வந்த ரயிலில் முன்பு தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.;
மதுரை புதிய ரயில் முன்பு தொங்கிய நிலையில் வந்த சடலம்.
மதுரைக்கு வந்த பொதிகை ரயில் என்ஜின் முன் இறந்த நிலையில் சிக்கி இருந்த மனித உடலைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி
செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் செங்கோட்டையிலிருந்து மாலை நேரம் கிளம்பி தென்காசி, ராஜபாளையம், மதுரை, திருச்சி வழியாக காலையில் சென்னையைச் சென்றடையும்.
நேற்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட பொதிகை ரயில், இரவு சுமார் 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் ஏறுவதற்காக பயணிகள் முன்டி அடித்துக்கொண்டு நடைபாதையில் நின்றுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது பொதிகை ரயில். இரவு நேரம் என்பதால் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில், என்ஜினின் முன் பகுதியில் மனித உடல் சிக்கி இருப்பதை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
கொஞ்சம் நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ரயிலில் இருந்தவர்கள் பதற, அடுத்து ரயில்வே போலீசாருக்கும், ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் ரயிலை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டு, அடுத்த நடக்க வேண்டியதை செய்ய ஆரம்பித்தனர்.
என்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையையும் தொடங்க திட்டமிட்டனர்.
இச்சம்பவம் மதுரை கப்பலூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் ரயிலில் தற்கொலை செய்ய முயன்ற போது என்ஜினின் முன் பகுதியில் உடல் சிக்கி இருக்கலாம் என்றும் அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும்
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இச்சம்பவதால் பொதிகை ரெயிலானது 45 நிமிடங்களுக்கு மேலாக மதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, உடல் ரயில் எஞ்சினிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது.