மதுரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதய தினத்தையொட்டி கிரிக்கெட் போட்டி
மதுரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதய தினத்தையொட்டி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
மதுரை விமானநிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் உதய தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.லீக் முறையில் நடைபெற்ற 23 போட்டிகளில், மதுரை விமான நிலைய மத்திய பாதுகாப்பு படை அணி கோப்பை வென்றது.ஏர் இந்தியா அணி 2வது இடம் பெற்றது.
மதுரை விமான நிலையத்தில், பணிபுரியும் மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் (சிஐஎஸ்எப்)குழுமம் சார்பாக, மத்திய தொழில் பாதுகாப்புத் துறை படை உருவான உதய தினத்தை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் போட்டிக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். விமான நிலைய பாதுகாப்பு முதன்மை அலுவலர் கணேசன் ,விமான நிலைய துணை மேலாளர் ஜானகி ராம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் ஏர் இந்தியா, இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட். , ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சுங்க இலாகா அணி, குடியேற்றத்துறை உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டன.
மொத்தம் பத்து அணிகள் கொண்ட 23 லீக் போட்டிகள் நடைபெற்றது. காலிறுதி ,அரையிறுதி, இறுதிப்போட்டி என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டியில் ஏர் இந்தியா விமான அணியுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அணி மோதியதில், மத்திய தொழில் பாதுகாப்பு படை அணி கோப்பையை வென்றது.
வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார் பரிசுகளை வழங்கினார்.