வழக்கறிஞர் வீட்டின் மீது வெடி குண்டு வீச்சு

மதுரை மேல அனுப்பானடியில், வழக்கறிஞர் வீட்டின் மீது வெடி குண்டு வீச்சு;

Update: 2021-11-16 04:15 GMT

மதுரை மேலஅனுப்பானடியில், வழக்கறிஞர் மாரிச்செல்வம் வீட்டில் இன்று காலை மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சிசிடிவி கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கறிஞர் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் இப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News