மதுரை அருகே பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடிய கவுன்சிலர்

தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாளுக்கு திமுக மூத்த தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்;

Update: 2023-03-02 14:30 GMT

மதுரை அருகே பள்ளியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடிய கவுன்சிலர்:

மதுரை அருகே வலையங்குளம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு நிரந்தர முதல்வராக வேண்டுமென மாணவர்களுடன் வழிபட்டு ஒன்றிய கவுன்சிலர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.

தமிழக முதல்வரின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். பாரத பிரதமர் மோடி, தமிழக தலைவர்  ஆகியோர் வாழ்த்துகள் கூறியுள்ளனர்

இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி அழகுமலை ஏற்பாட்டின் படி,கிளை கழக நிர்வாகிகளுடன், பள்ளி மாணவ மாணவிகள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பூரண நலத்துடனும் நிரந்தர முதல்வராக இருக்க வேண்டும் எனவும் வழிபட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைவர் அண்ணாமலை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, பொது வாழ்வில் இன்னும் பல ஆண்டுகள் அவரது பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். குன்றாத நலத்துடன் இன்னும் பல்லாண்டுகள் மக்கள் பணியை மேற்கொள்ள வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இன்று 70-ம் பிறந்தநாள் காணும் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் மு.க. ஸ்டாலின், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: முதல்வர்களில் முதன்மையானவராகவும், தமிழகத்தை அடக்கியாளத் துடிப்பவர்களின் கனவைத் தகர்ப்பவராகவும் திகழும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழகத்தின் முதல்வர், என் மனதிற்கினிய நண்பர் மு.க.ஸ்டாலின் நீடுழி வாழ இந்தப் பிறந்தநாளில் வாழ்த்துகிறேன்.

Tags:    

Similar News