மதுரையில் கொரோனா விதிகளை காற்றில் பறக்க விடும் இறைச்சிக் கடை
மதுரையில் கொரோனா விதிகளை, பல இறைச்சிக்கடைகள் கடைபிடிப்பதில்லை; இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.;
கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஞாயிறுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முழு ஊரடங்கு என்பதால், இறைச்சி கடைகளும் மூடப்பட்டு இருக்கும். இந்த நிலையில், மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள மீன், ஆடு, கோழி ஆகிய இறைச்சி கடைகளில், இன்று மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.
அசைவப் பிரியர்கள் இன்று காலை 6 மணிக்கெல்லாம் இறைச்சி கடைகளில், மக்கள் குவிய தொடங்கியுள்ளனர். இன்று மாலை வரை கூட்டம் மேலும், அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதே நேரம் இக்கடைகள் பலவற்றிலும் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சமூக இடைவெளியை மறந்து, மீன்கள் கடைகள், இறைச்சிக் கடைகளில் பலரும் குவிந்துள்ள நிலையில், அதிகாரிகள் விதிமீறலை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.