அவனியாபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை பாஜக சுகாதார தன்னார்வ குழு தலைவர் ஆய்வு

அவனியாபுரத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பாஜக சுகாதார தன்னார்வ குழு தலைவர் ஆய்வு செய்தார்.

Update: 2021-08-26 08:17 GMT

அவனியாபுரத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிடும் டாக்டர் சரவணன்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தடுப்பூசி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், மதுரை மாநகராட்சி சார்பில் கோவாக்சின், கோவிட்சீல்டு இரண்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

இந்த முகாமை சுகாதார தன்னார்வ குழு தலைவர் டாக்டர் சரவணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சுந்தர் மண்டல் தலைவர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து டாக்டர் சரவணன் கூறுகையில், பிரதமர் மோடி அறிவுறுத்தலின்படி, சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்றாவது அலை வரும் முன், மக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பிறநாடுகளில் ஒரு தடுப்பூசி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் மட்டும் கோவிட்சீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல், குழந்தைகளுக்கு தடுப்பூசி சொட்டு மருந்தாக வழங்குவது குறித்து அரசு தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது என்று டாக்டர் சரவணன் தெரிவித்தார்.

Tags:    

Similar News