தமிழகத்தில் புதியவகை கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது: மத்திய அமைச்சர் தகவல்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங். டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்;

Update: 2023-12-30 08:30 GMT

மதுரையில் விமான நிலையத்தில்  பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங்.

கொரோனா கட்டுபாட்டில் தான் உள்ளது: மத்திய இணை அமைச்சர்:

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.சிங். டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் மேலும்  கூறியதாவது:

மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவில் சென்று விட்டு, பின்னர் ராமேஸ்வரம் செல்கிறேன் அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆயுஷ்மான் பிரதான் மந்திரி காப்பீட்டு திட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்த கேள்விக்கு:கூடிய விரைவில் தொடங்கப்படும். புதிதாக பரவும் ஜே. என். ஒன் கொரோனா குறித்த கேள்விக்கு:அது கட்டுப்பாட்டில் தான் உள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கமும் குறைவுதான்..மருத்துவ கலந்தாய்வை மத்திய அரசு நடத்த உள்ளதா என்ற கேள்விக்கு: தற்போதைக்கு ஒரே நாடு; ஒரே தேர்வு என்கிற நிலை உள்ளது. எய்ம்ஸ் தவிர மற்ற கல்வி நிறுவனங்களில் நீட் இளநிலை பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கும்  நடத்தப்படஉள்ளது என்றார் மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங். 

Tags:    

Similar News