சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு வந்த விமானப் பயணிக்கு கொரோனா தொற்று

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரி பள்ளம் பகுதியைசேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-05 13:00 GMT

மதுரை விமானநிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனை

விமானத்தில் சிங்கபூரிலிருந்து இலங்கை மூலம் மதுரை வந்த நாகர்கோவிலை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று: கண்டறியப்பட்டதால்,சுகாதாரத்துறை சார்பில் ஒமிக்ரான் பரிசோதனை செய்துஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதி:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மதுரை விமான நிலையத்தில், துபாய், மற்றும் இலங்கையிலிருந்து வந்த பயணிகளிடம் சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர்.துபாயிலிருந்து 128 பயணிகளும் இலங்கையிலிருந்து 151 பயணிகளும் மதுரை வந்தனர்.அதில், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆசாரி பள்ளம் பகுதியைசேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவருடன் வந்த மனைவி மற்றும் மகனுக்கு மற்றும் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று காணப்பட்டதால், அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும், அவர் குடும்பத்தினர் இருவரும் தனிமைப்படுத்தி வைக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தனர். விமானத்தில் வந்த 15 | பயணிகளில் 38 பேருக்கு, பரிசோதனை செய்தனர்.. நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் சேர்ந்த நபருக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது..அவர் மனைவி மகன் உள்ளிட்ட மற்ற பயணிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியானது. இதனைத்தொடர்ந்துபயணிகள் அனைவரும் 15 நாட்கள் தணிமையில் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தினர்..மேலும், வருவாயத்துறை, காவல் துறை சார்பில் அவர்கள் பொது இடங்களுக்கு செல்வது குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

Tags:    

Similar News