அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம்: புரட்சி பாரதம் கட்சி தகவல்

விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் என்எல்சி நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. இதனை கண்டித்துபாட்டாளி மக்கள் கட்சி போராட்டம்

Update: 2023-07-30 09:15 GMT

மதுரையில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது

அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம் மதுரையில் புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் கோவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ பேட்டி:

மதுரையில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ நிறுவனர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில், திமுக அரசில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதகழிவு கலந்தவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திமுக அரசு திணறி வருகிறது.

கடலூர் மாவட்டம், விவசாயிகளை பாதிக்கின்ற வகையில் என்எல்சி நிர்வாகம் செயல் பட்டு வருகின்றது. இதனைக் கண்டித்து, போராட்டம் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாசை போலீசார் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்க செயலாகும்.எனவே, என்எல்சி நிர்வாகம் விவசாயிகளுக்கு தற்கால மார்க்கெட் அடிப்படையில் எடுக்கப்படுகின்ற நிலங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் .

மேலும், அவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் பல ஊராட்சிகளில் மயானத்திற்கு செல்கின்ற பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது .அதனை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகம் முழுவதும் 10 ஊராட்சிகளை ஒன்றிணைத்து மின்மயானம் மற்றும் இலவச ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்பட வேண்டும் .தமிழக அரசு பணிகளில் நிரப்பப்படாமல் உள்ள பத்தாயிரம் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடுகளை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். தற்போது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில் எடப்பாடி அணியில் தொடர்ந்து இருந்து வருகின்றோம் . நாங்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவில் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம் இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News