மதுரையில் வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நியமனம் செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

Update: 2023-11-03 16:15 GMT

மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 01.01.2024ஆம் தேதியினைத் தகுதியேற்ப்படுத்தும் நாளாகக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் 27.10.2023 அன்று வெளியிடப்பட்டது.

இது சம்பந்தமாக, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் எ.சுந்தரவல்லி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையாளர் ஆய்வுக் கூட்டம் 03.11.2023 -ல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டம் நடத்தப்பட்டது. 

வாக்காளர் பட்டியலை, சீரிய முறையில் தயார் செய்திடவும், பெறப்படும் படிவங்களை உரிய முறையில் விசாரனை செய்து ஆணை பிறப்பிப்பது சம்பந்தமாகவும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு நல்கிடுமாறு கோரப்பட்டது. இது சம்பந்தமாக, வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் செய்யாத அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நியமனம் செய்திட கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும், வாக்காளர் பட்டியலில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான கருத்துக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம் எனவும் தெரிவித்தார்.

 தேர்தல் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) மற்றும் தேர்தல் வட்டாட்சியர் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News