திருப்பரங்குன்றம் முருகன்கோவிலில் சஷ்டிமண்டபம் கட்டும் பணி: முதல்வர் தொடக்கம்
முருகன்கோவிலில் சஷ்டிமண்டபம் கட்டும் பணியை காணொளி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்;
மதுரை அருகே திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில், லட்சுமி தீர்த்தம் மற்றும் சஷ்டி மண்டப பணிகளுக்காக ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில், தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பணிகளை தொடக்கி வைத்தார்.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சுமி தீர்த்தம் புனரமைப்பு பணிகளுக்காக ஆறரை கோடி நிதி ஒதுக்கீட்டிலும் மற்றும் பாலாஜி நகரில் உள்ள சஷ்டி மண்டபம் கட்டும் பணிகளுக்காக ரூபாய் 4.5 கோடி மதிப்பீட்டிலும் மொத்தம் 11 கோடி மதிப்பீட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, திருப்பரங்குன்றம் கோவில் இணை ஆணையாளர் சுரேஷ் , மற்றும் தளபதி எம்எல்ஏ. திருப்பரங்குன்றம் கோவில் அர்ச்சகர் ராஜா பட்டர் மற்றும் சாமிநாத பட்டர், மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர் சுவிதா விமல் மற்றும் மாமன்ற உறுப்பினர் சிவசக்தி திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் ஆயிரம் கோவில்களை புனரமைக்க உள்ளதாகவும் அதில் முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் 80 கோயில்கள் புனரமைக்கப்பட்டு இந்த ஆண்டிலேயே குடமுழுக்க நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.