மதுரை விமான நிலையத்தில் பயணியை சுங்கத்துறையினர் தாக்கியதாக புகார்
மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது;
மதுரை விமான நிலையத்தில் சுங்கத். துறையினர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது
மதுரை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 109 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.அதில், மதுபானம் மற்றும் சேலைகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்கள் மீது சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் நடத்திய தாக்குதலில், ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பயணிகளாக மதுரைக்கு வந்தவர்களில் சிலர் விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள் கொண்டு வந்த நிலையில் 1 இந்தியன் மற்றும் 3 ஸ்ரீலங்கன் உட்பட 4 பேரை மதுரை விமான நிலைய சுங்க இலக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்கியதில், தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஓருவர் அனுமதி பட்டுள்ளதாக தெரிய வருகிறது.கடந்த 3ஆம் தேதி திருச்சி வழியாக செல்வகுமார் இலங்கை சென்றுள்ளார்.
அங்கிருந்து பாங்காங் செல்லும் விமான ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் இன்று இலங்கை யிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தாக்கியதில், கை கழுத்து தோள்பட்டை போன்ற இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் செல்வகுமார் என்பவருக்கு, மதுரை விமான நிலையத்தில் சுப்பையா தாக்கியதில் காயம் ஏற்பட்டு , அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாக்காவினர் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளிடம் அதிக சுங்க கட்டணம் மற்றும் வசூல் செய்வது அவருக்கான பில் வரி சான்று தருவதில்லை என குற்றச்சாட்டும் உள்ளது.மேலும், தங்கம் கடத்தல் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மை இல்லை கடத்தல் தங்கம் பிடிபட்டு மூன்று நான்கு நாட்களுக்குப் பின் தான் அறிவிப்புகள் வெளியாகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது.
முன்பு, கடத்தல் தங்கம் பிடிபட்டவுடன் உடனுக்குடனே செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது தாமதமான செய்திகள் வருவதற்கு கடத்தல்காரர்களுக்கு சுங்க இலாக்காவினர் உடந்தையாக செயல்படுவது போன்ற குற்றச்சாட்டும்எழுந்துள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் பயணிகளிடம் மதுபானம் பறிமுதல் மற்றும் கூடுதல் சுங்க கட்டணம் போன்றவற்றிற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.