வணிக வளாகங்களில் திடீர் ரெய்டு; சுகாதாரத் துறையினர் அதிரடி
மதுரை அருகே, திருப்பரங்குன்றம் வட்டார ப் பகுதியில் வணிக நிறுவனங்கங்களில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர.;
கடைகளில் அபராதம் வசூலிக்கும் சுகாதாரத்துறையினர்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன் உத்தரவின்படியும் சுகாதாரத் துறையினர் தீவிர புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன்குமார் உத்தரவின்பேரில், வட்டார மருத்துவர் சிவக்குமார் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட வலையன்குளம், சோளங்குருணி, சிந்தாமணி, சாமநத்தம் ,பனையூர், வலையபட்டி, பொட்டல் பனையூர். உள்ளிட்ட பகுதிகளில் தீவிர புகையிலை மற்றும் போதை பொருள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைகள், வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனை செய்ததில், சுமார் ரூ. 3000 மதிப்புள்ள புகையிலை மற்றும் பாக்கு ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கடைகள் வணிக நிறுவனங்களில் முகக் கவசம் அணியாமல், செயல்பட்ட நிறுவனங்களுக்கு 11 நிறுவனங்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டது. இதன் மூலம் 4,500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.