மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாட்டம்

College Pongal Celebration திருப்பரங்குன்றம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா, தேசிய இளைஞர் நாள் விழாவில் இளவட்ட கல்லை அசாதரணமாக தூக்கி போட்ட மாணவர்கள்.சினிமா பாடலுக்கு நடனமாடிய மாணவ மாணவிகள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.;

Update: 2024-01-13 12:23 GMT

மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், பொங்கல்விழாவையொட்டி மாணவிகள் ஆடிய நடனம்.

College Pongal Celebration


பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கருதப்படுகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை  என்பதற்கு சான்றாக உழவுத்தொழிலை மேற்கொண்ட விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகையானது பொங்கல்விழா. இது தமிழகத்தில் மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்து தமிழ் சமுதாய மக்களும் உற்சாகத்துடன் ஆண்டுதோறும் பண்டிகையாகவும் கருதப்படுகிறது. பொங்கல் என்றாலே கரும்பு நினைவுக்கு வரும். அதேபோல்அடுத்து நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டுதான். இந்த ஆண்டில்  ஜல்லிக்கட்டுக்கென புதிய வளாகம் திறப்பு விழா இம்மாத இறுதியில்  முதல்வர் தலைமையில் நடக்க உள்ளது. எனவே 2024 பொங்கல் பண்டிகையானது  தமிழர்கள் வாழ்வில் மறவாத நாளாக கருதும் வகையில் இந்த வரலாற்று நிகழ்வானது நடக்க உள்ளது. ரூ.44 கோடியில்  66 ஏக்கர் பரப்பளவில்  பல நவீன வசதிகள் கொண்ட ஜல்லிக்கட்டு வளாகம் திறக்கப்பட உள்ளது. 

மதுரை, திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பொங்கல் விழா மற்றும் தேசிய இளைஞர் நாள் விழா நடைபெற்றது.இவ்விழாவில், கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினார்.இவ்விழாவில், பானை உடைத்தல், இளவட்டக்கல் தூக்குதல், பலூன் உடைத்தல் , போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், சினிமா பாடலுக்கு மாணவ மாணவிகள் நடனமாடினர். அதன் பின்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கொடைக்கானல் அன்னை தெரேசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலா சிறப்புரை ஆற்றினார்.

கல்லூரித் தலைவர் ராஜகோபால் , உப தலைவர் ஜெயராம் கல்லூரி முதல்வர் விஜயராகவன் பொருளாளர் ஆழ்வார் சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்...

Tags:    

Similar News