மதுரை அருகே திறக்கப்படாத பாலம்: ஆட்சியர் ஆய்வு
மதுரை அருகே திறக்கப்படாத பாலத்தை, ஆட்சியர் அனீஸ் சேகர் ஆய்வு செய்தார்.;
மதுரை மாவட்டம் துவரிமானில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றின் துவக்க விழாவிற்கு வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், பின்னர் நீண்ட நாட்களாக கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் இருக்கும் துவரிமான் - பரவை இடையேயான வைகை ஆற்று பாலத்தை டூவீலரில் சென்று நேரில் பார்வையிட்டார்.
துவரிமான் பாலத்தில் இருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு பாதை வழியாக, பரவை சாலையை அடைந்து கையகப்படுத்தபடாமல் இருக்கும் இடங்களை நேரில் ஆய்வு செய்த ஆட்சியர் அனீஸ் சேகர், திடீரென டூ வீலர் ஓட்டி சென்று ஆய்வு செய்ததால், அரசு அதிகாரிகள் செய்வதறியாது தவித்தனர்; ஒவ்வொருவரும் தனித்தனியாக டூவீலரில் மாவட்ட ஆட்சியரை பின்தொடர்ந்து சென்றனர்.