மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சர் பங்கேற்பு

மதுரை காந்தி மியூசியத்தில் அம்மா பேரவை சார்பில் தூய்மைப்படுத்தும் பணியை எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

Update: 2022-10-09 10:45 GMT

மதுரை காந்தி மியூசியம் வளாகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட  அதிமுகவினர்

மதுரை காந்தி மியூசியத்தில் அம்மா பேரவை சார்பில் தூய்மைப்படுத்தும் திட்டத்தினை, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

மதுரை காந்தி மியூசியத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக் கிணங்க, கழக அம்மா பேரவையின் சார்பில், தூய்மைப் படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு, மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை  வகித்தார். மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.  இதனை, கழக அம்மா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான், கழக அம்மா பேரவை நிர்வாகிகள் எம்.இளங்கோவன், சதன் பிரபாகரன், பா.வெற்றிவேல், மற்றும் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், அன்னபூர்ணா தங்கராஜ், திருப்பதி, ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர்கணேசன், அன்பழகன், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏறக்குறைய 2 ஏக்கர் பரப்பளவில் புதர் மண்டி கிடந்த இடத்தினை சுத்தப்படுத்தி தூய்மைப்படுத்தப்பட்டது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள்  பாராட்டினர். பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: இந்தியாவிலேயே தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு, முதல் அருங்காட்சியமாக திகழும் மதுரை காந்திமியூசி

யத்தை  அதிமுக  அம்மா பேரவை சார்பில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி, இந்த வாளகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். 

கடந்த 2017 ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசிடம் விருது பெற்றது. அதனைத் தொடர்ந்து 2020 -2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் தூய்மை நகரங்களாக வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியும், சென்னை மாநகராட்சியும் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது பெற்றது.

தற்பொழுது, 2022 ஆண்டில் தூய்மையான நகரங்கள் என்ற திட்டத்தில் 45 நகரங்களில்,10 லட்சம் மக்கள் வசிக்கும் பட்டியலில் சென்னை 44 வது இடமும், மதுரை 45 வது கடைசி இடத்தில் இடம் பெற்றது. இது நமக்கு கவலை அளிக்க கூடிய செய்தியாக உள்ளது. இந்த தூய்மைப் பணியில் அரசு  இருந்தாலும், கழக அம்மா பேரவை போன்ற அமைப்புகளும், ஒரு முன்மாதிரியாக இது போன்ற தூய்மையான பணிகளுக்கு, விழிப்புணர்வை இளைஞர்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து இந்த தூய்மை பணி படுத்தும் பணியில் கோவில், கல்லூரிகள், பள்ளிகள், பொதுவளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடங்களில் நடைபெறும்.

ஆன்லைன் தடை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில், முதன் முதலில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். அந்த அடிப்படையில் தற்போது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது .ஆன்லைன் சூதாட்டத்தால், பணத்தை இழந்து அதிகமான உயிர்கள் பறிபோய் உள்ளன மீண்டும் அந்த நிலை வரக்கூடாது.

தென் மாவட்டங்களில் சிறார்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன, குறிப்பாக, இதுவரை 6,064 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தற்கொலைகளை எடுத்துக் கொண்டால், மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக  தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகம் கடைசி இடம். அதே போல் தற்கொலை நிகழ்வில் தமிழகம் இரண்டாவது இடம் அந்த அளவில் தமிழகம் மோசமான அளவில் உள்ளது.

முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையை ஆய்வு செய்து, 80 சகவீத பணிகள் நிறைவுற்றதாக அறிவித்துள்ளார், ஆனால், இதுவரை 30 சகவீதம் மற்றும் 40 சதவீத பணிகள் தான் நடைபெற்றுள்ளன, இது தான் உண்மையான நிலைப்பாடு.ஏற்கெனவே, தென்மேற்கு பருவ மழையில் நமக்கு கூடுதலாக 40% மழை பொழிவு இருந்தது, தற்போது வடகிழக்கு பெருமழை கூடுதலாக நமக்கு மழை கிடைக்கும், ஆகவே ,  பருவமழையில் உயிரிழப்பு இல்லாமல் ,எப்படி எடப்பாடியார் கஜா புயல் போன்ற பருவ மழைகளை மேற்கொண்டாரோ, அதேபோல் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல் , போதை பொருள்கள் கோயில், பொதுஇடங்கள், சினிமா, கல்லூரி ,பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் அதிகரித்து வருகின்றன, தற்போது, போதையில் பொருட்களை நடமாட்டத்தை அரசு நடவடிக்கை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை.அதேபோல், மின்னல் வேட்டையில் ஒரே நாளில் 133 ரவுடிகளை பிடித்தோம் என்று காவல்துறை கூறி வருகிறது, ஆனாலும் சட்ட ஒழுங்கில் நடைமுறை  இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே அரசு இளைய சமுதாயத்திற்கு தகுந்த விழிப்புணர்களை,தகுந்த பயிற்சியை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

எம்ஜிஆர் கொள்கைகளை முன்னிருத்தி அதிமுக செயல்பட்டு வருகிறது, திமுகவில் வாரிசு அரசியல், மன்னராட்சி நடைபெற்று வருகிறது.அவர்கள் கொள்கை வேறு எங்கள் கொள்கை வேறு.வருகின்ற சட்டமன்ற கூட்டதொடரில் கடுமையான சொத்து வரி உயர்வு, கடுமையான மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து  மக்கள் நலனுக்காக எடப்பாடி பழனிசாமி  தொடர்ந்து குரல் கொடுப்பார்,அது மட்டுமல்லாது திமுக கொடுத்துள்ள 525 தேர்தல் வாக்குறுதிகளை என்ன நிலைப்பாடு என்று கேள்வி எழுப்பப்படும்.

தமிழக ஆளுநர் மற்றும் பாரத பிரதமர் திருக்குறளை  பற்றி பேசுவது தமிழ் மொழிக்கு பெருமையாக உள்ளது, ஆனால், சிலர் இதில் விமர்சனம் செய்து விளம்பரம் தேடி வருகின்றனர். குறிப்பாக, இன்றைக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, கல்வி வழங்குவது, தொழில் நிறுவனங்கள் தொடங்குவது, தனிநபர் வருமானத்தை உயர்த்துவது, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவது என்று  விமர்சனம் செய்பவர்கள் இதிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ந்து மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து எடப்பாடியார் பெற்று கொடுத்தார்,  காவிரி பிரச்சனையில் 22 நாட்கள் அவையை முடக்கி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்து,  தீர்வு கண்டார்கள். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணிகளைத் தொடங்க தற்போது திமுகவிற்கு ஒரு நொடி பொழுதில் வாய்ப்பு உள்ளது என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

Tags:    

Similar News