நதிகளை சுத்தப்படுத்துவது நாட்டிற்கு உகந்தது: ரவிசங்கர்ஜி கருத்து
மதுரையில் வைகை நதி புனரமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றார் சுவாமி ரவிசங்கர்ஜி;
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுவாமிரவிசங்கர்ஜி
மதுரையில் வைகை நதி புணரமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என சுவாமி ரவிசங்கர்ஜி தெரிவித்தார்.
தென் தமிழகத்தில் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்காக, ராமேஸ்வரத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம், மதுரை விமான நிலையம் வந்த வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் கலாச்சாரம் சிறந்து விளங்குவதாகவும், இங்கு திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 19 நதிகளை புனரமைகவும், மதுரையில் வைகை, கிருதுமால் நதி, குண்டாறு உள்ளிட்ட நதிகளை புனரமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் 85 நதிகள் உள்ளது. ஆனால் அது சான்றாக மட்டுமே உள்ளது .இதனை அனைத்தும் புனரமைத்தால் நாடு சிறப்பாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை.
தற்போது நடைபெற்று வரும் போர் சூழல்கள் சீக்கிரத்தில் முடிவுக்கு வர வேண்டும், தொடர்ந்து நதிகள் தொடங்கும் இடத்தில் நாட்டு மரங்கள் நட்டு வருகிறோம்.முதலில், பிளாஸ்டிக் மற்றும் நதிகளில் கலக்கும் கழிவுநீரை எல்லாருடைய ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தடுக்க முடியும்.உக்ரேனில் நடைபெற்றுவரும் போரில் அங்கு வாழும் இந்தியாவைச் சேர்ந்த மக்களை உக்ரேனின் அண்டை நாடுகளான போலந்து,
நார்வே, ஸ்வீடன் நாடுகளில் இருந்து எங்களுடைய தொண்டர்கள் வாகனங்களில் மீட்டு எல்லையில் கொண்டு வந்து சேர்த்தனர். தொடர்ந்து, ஏழு நாடுகளில் உள்ள எங்களுடைய மையங்களில் இருந்து தொண்டர்கள் அவர்களை அழைத்துச் சென்று உணவு தங்குமிடம் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதன் மூலம் இந்தியாவை சேர்ந்த பல ஆயிரம் மக்களை மீட்டுக் கொண்டு வந்தனர் .இன்னும் தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் ரவிசங்கர்ஜி கூறினார்.தொடர்ந்து, மதுரை விமான நிலையத்திலிருந்து திருப்பரங்குன்றம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலம் புறப்பட்டு சென்றார்.