மதுரையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

வார்டு 60 வார்டு 70 இடையேயான எல்லை பிரச்னை காரணமாக இப்பகுதியின் பாதாள சாக்கடையை யார் சரி செய்வது என்ற தகராறு நீடித்து வந்தது;

Update: 2023-11-03 08:45 GMT
மதுரையில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரையில், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் 

  • whatsapp icon

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மதுரை பைபாஸ் ரோடு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் தலைமை அலுவலகம் எதிரே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி பகுதியான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தெரு பகுதியில், பாதாள சாக்கடை சரிவர இயங்குவில்லை மேலும், வார்டு 60 மற்றும் 70 வார்டு இடையான எல்லை பிரச்னை உள்ள காரணத்தால் யார் இந்தப்பகுதியின் பாதாள சாக்கடையை சரி செய்வது என்ற முடிவு எட்டப்படாமல்  மாநகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போட்டிருந்தனர். இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் மதுரை பைபாஸ் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ். எஸ். காலனி காவல் துறையினர் மற்றும் இரண்டு வார்டு கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய  சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் மறியல் கை விடப்பட்டது..

Tags:    

Similar News