சோழவந்தான் போரூராட்சித் தேர்தல்: தீவிர பிரசாரத்தில் பாஜக வேட்பாளர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளிலும் நடைபெற உள்ளதேர்தலில் பாஜக வேட்பாளர்கள் பிரசாரத்தில் முந்தியுள்ளனர்

Update: 2022-02-03 03:30 GMT

சோழவந்தான் பேரூராட்சியில் போட்டியிட பாஜக சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அனைத்து கட்சிகள் சார்பில் அனைத்து பகுதிகளிலும் தாக்கல் செய்யும் நிகழ்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 18 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பாக மூன்றாவது வார்டுக்கு பாஜக விவசாய அணி மாநில செயலாளர் மணி முத்தையா வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோல் ஐந்தாவது வார்டுக்கு சிவகாமிலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக பாஜகவினர் சோழவந்தான் உள்ள பாஜக விவசாய சேவை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர்.

இதில் மாவட்ட தலைவர் மகா சசிதரன், ஒன்றிய தலைவர் முருகேஸ்வரி, தொகுதி செயலாளர் கோவிந்த மூர்த்தி, உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், ஏழாவது வார்டு சிவராம சுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஏழாவது வார்டு சுயேச்சையாக ராஜேந்திரன் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். தேர்தல் அலுவலர் சுதர்சன் உதவி தேர்தல் அலுவலர்கள் ஆலய லோகேஷ், முத்துப்பாண்டி ஆகியோர் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டனர்

Tags:    

Similar News