அமைச்சரவை மாற்றம் என்பது முதல்வரின் விருப்பம்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்றார் அமைச்சர்

Update: 2022-12-30 14:30 GMT

அமைச்சர் கண்ணப்பன்(பைல் படம்)

பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்ற பகவத்கீதை வாசகத்தை எடுத்துக்காட்டாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை  அமைச்சா ராஜ கண்ணப்பன் கூறினார்

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்:

பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் அதிமுக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, போற்றுவோர் போற்றட்டும்; புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும்.  இன்றைக்கு  இருக்கும் நிதி ஆதாரத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்வோம்.வரும் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தரப்பில் ரூ.1,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல் வேட்டி மற்றும் சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை அதிமுகவினர், நாங்கள் அறிவுறுத்திய பின்னரே தமிழக அரசு வழங்கியதாக பேசி வருகின்றனர்.கரும்பு என்பது போராட்டத்திற்காக அல்ல. மக்களின் வேண்டுகோளுக்கேற்ப கொடுக்கிறோம். எதிர்கட்சியை பற்றியோ எடப்பாடியை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 

பொங்கல் தொகுப்பு குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு: அதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பொங்கல் தொகுப்பு 2 கோடியே 19 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.வேஷ்டி, சேலைகள் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் சொல்லியுள்ளார். எந்தவிதமான குற்றச்சாட்டுகள் இல்லாமல் இந்த ஆண்டு ரொக்கம் ஆயிரம், சர்க்கரை வெல்லம், முழு கரும்பு கொடுத்து, கரும்புக்கு விலையும் நிர்ணயித்து முறைப்படி நடக்கிறது. அமைச்சரவை மாற்றங்கள் குறித்த கேள்விக்கு:அமைச்சர்கள் இலாக்கா மாற்றம் என்பது முதல்வரின் விருப்பம் என்றார் அமைச்சர் ராஜ கண்ணப்பன்.

Tags:    

Similar News