பேருந்து நடத்துனரை தாக்கி பணம் பறிப்பு: போலீஸார் விசாரணை

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் 8 பேர் உயிரிந்தது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-03-25 11:00 GMT

பைல் படம்

வில்லாபுரத்தில் டவுன்பஸ் கண்டக்டரை தாக்கி பணம்பறிப்பு

மதுரை,திருப்பரங்குன்றம் தேவிநகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்திமகன் சிவசக்திகுமார் 38.இவர் அரசு டவுன்பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் வேலை செய்த பஸ் வில்லாபுரம் மெயின்ரோட்டில் சென்றுகொண்டிருந்தது.பஸ் பத்மா தியேட்டர் ஸ்டாப்பில் புறப்பட்டது.அப்போது வேகமாக ஓடிவந்த வாலிபர் ஓடும்ப ஸ்ஸில் ஏறினார்.மேலும் தன் நண்பர் வருவதாக கூறி பஸ்ஸை நிறுத்தச் சொல்லியுள்ளார்.இதை கண்டக்டர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டார்.அப்போது அவருடைய நண்பரும் ஓடி வந்து விட்டார்.அவரும் சேர்ந்து தகராறு செய்து கண்டக்டர் சிவசக்திகுமாரை தாக்கி அவரிடமிருந்து நானூறு ரூபாயை பறித்துச் சென்று விட்டனர்.இந்த சம்பவம் குறித்து சிவசக்திகுமார் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை தாக்கி பணம் பறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

மதுரை அரசு மருத்துமனை பிரசவ வார்டில் நகை பணம் மாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நடுப்பட்டியை சேர்ந்தவர் வசந்தா54.இவரது உறவினர் பெண் ஒருவரை பிரசவ வார்டில் சேர்த்துள்ளார்.இவர் வைத்திருந்த மணிநர்ஸில் முக்கால் பவுன் தங்க நகையும் ரூ 700ம் வைத்திருந்தார்.அவர் வைத்திருந்த பர்ஸ் நகை பணத்துடன் தொலைந்துவிட்டது.இதுகுறித்து அவர் அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பணத்துடன் மணிபர்சை எடுத்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சி.சி.டிவி பதிவுகளையும் ஆய்வு செய்து தேடிவருகின்றனர்.

பெட்டி கடையின் மேற்கூறையை உடைத்து பணம் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு

மதுரை, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சின்ன கண்மாய் தென்றல் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் வடிவேல் (50.).  இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு வியாபாரம் முந்து வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் கடை திறக்கவந்து பார்த்தபோது கடையின் மேற்கூறை உடைக்கப்பட்டிருந்தது. கடையில் வைத்திருந்த 20 பாக்கெட்டுகள் சிகரட்டையும் ரூ.1,200 ஐயும் மர்ம ஆசாமி திருடி சென்றது தெரிய வந்தது. இந்த திருட்டு குறித்து வடிவேல் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.

மதுரையில் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து பட்டதாரி பெண் தற்கொலை

 மதுரைஎஸ் எஸ் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் மகள் அக்ஷயா( 21 ) இவ்வாறு அந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் மூன்றாவது மாடியில் குடியிருந்து வருகிறார். அக்ஷயா கல்லூரி ஒன்றில் எம்.எஸ்.ஸி பட்டப்படிப்பு படித்து வருகிறார். சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சந்தை சுரேஷ் எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டதாரி மாணவி அக்ஷயாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்ன கடை தெருவில் குளிர்பான வியாபாரி சாவு

மதுரை பவர் ஹவுஸ் ரோடை சேர்ந்தவர் கருப்பையா( 70.). இவர் குளிர்பானம் விற்பனை செய்து வந்தார் .சைக்கிளில் வைத்து கடைகளுக்கு விநியோகம் செய்து விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சின்ன கடை தெருவில் இவர் சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். இவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து மகன் மாரிமுத்து தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயிற்றுப்போக்கு காரணமாக  வாலிபர் சாவு

கே புதூர் காந்திபுரம் பாண்டியன் நகர் கருப்பசாமி மகன் கரணம்(33.). இவருக்கு தொடர்ந்து மூன்று நாட்களாக வயிற்றுப்போக்கு இருந்தது. இந்த நிலையில் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து அவருடைய அக்கா ஜோதி கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் கரணத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

மதுகை ஆத்திகுளம் பழனிச்சாமி நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் சீனி புஷ்பம்(62 ).இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து மகன் தங்க முருகன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதை பழக்கத்தால் நோய்வாய்ப்பட்ட வாலிபர் சாவு

மதுரை தனக்கன்குளம் பசும்பொன் நகர் மீனாட்சி சுந்தரம் மகன் குபேந்திரன்(33.). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்த நிலையில் திடீரென்று நோய்வாய்ப்பட்டார். இவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் இவர் உயிரிழந்தார். இது குறித்து மனைவி முத்த ரசி திருநகர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து குபேந்திரனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

விளாச்சேரி முஸ்லிம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் மகன் முகமது உசேன்30. இவருக்கு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது .இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தந்தை அப்துல் ரகுமான் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் முகமது உசேன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீர் உடல் நலக்குறைவு முதியவர் மயங்கி விழுந்து சாவு

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரம் முதல் தெரு மகாலட்சுமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சை 69. இவருக்கு திடீர் உடல் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்து ப உயிரிழந்தார். இது குறித்து மகன் வெங்கட்ராஜ் ஜெய்ஹிந்துபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் சாலையில் முத்து பாலம் அடியில் மயங்கி விழுந்தவர் சாவு

மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நீலமேகம் 53.நான்கு வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கிய இவருக்கு இடது கால் செயல்படவில்லை .இந்த நிலையில் அவர் முத்துப்பாலம் அடியில் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா காளியம்மாள் ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து நீல மேகத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட  மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

மதுரை நெல்பேட்டை சீனி ராவுத்தர் தோப்பைச் சேர்ந்தவர் மும்தாஜ் பேகம்(60 )..இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டி ருந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவருடைய சகோதரர் சாதிக் பாஷா, விளக்குத் தூண் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News