மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு வேலம்மாள் மருத்துவமனை, யங் இந்தியன்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மார்பக புற்றுநோய் விழிப்புணர்பு முகாமை, வேலம்மாள் மருத்துவமனை இயக்குநர் கார்த்திக் முத்துராமலிங்கம் குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். வேல்மாள் மருத்துவ கல்லூரி புற்றுநோய் துறைத் தலைவர் டாக்டர் .ராஜ்குமார். பேசும் போது, மார்பக புற்றுநோய் என்பது ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறியப்படுவதில்லை.
மார்பக புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் வரும். பெண்களை விட ஆண்கள் அதிகம் மார்பக புற்றுநோயால் பாதிப்பு அடையலாம். பெண்கள் உடற்பயிற்சி மற்றும் சுயபரிசோதனைகள் மூலம் மார்பக கட்டிகளை பற்றி தெரிந்து சிகிச்சை ஆரம்பிக்கலாம். இதேபோல், ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மிகவும் பாதிப்பை உண்டாக்கும். பெண்களை விட ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் கட்டி பற்றி அறிந்து கொள்வதில்லை என்பது வருத்தமான செய்தி, ஆகையால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருந்து கொள்வது அவசியம் என குறிப்பிட்டார்.