காலை உணவுத் திட்டம்: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் அமைச்சர்கள் ஆய்வு
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
மதுரை நாராயணபுரத்தில், உள்ள மாநகராட்சி பள்ளியில், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி, மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்தார்த் சிங் ஆகியோர் காலை உணவு திட்டத்தை, ஆய்வு செய்தனர் .
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின், அண்மையில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, மதுரையில் அமைச்சர்கள் இத்திட்டத்தை ஆய்வு செய்தனர். இத்திட்டமானது பள்ளிகளில், முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனவும், மாணவர்களிடம் அமைச்சர் உதயநிதி இதுகுறித்து கேட்டறிந்தார். முன்னதாக, மாணவருடன் அமர்ந்து உணவை ருசித்துப் பார்த்தார்.