பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் பலியான ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் தகனம்
பஞ்சாப் ராணுவ முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தேவாரம் பகுதியைச் சேர்ந்த வீரர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது;
பஞ்சாப் மாநிலம், ராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலையில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் தமிழகத் தைச் சேர்ந்த யோகேஷ்குமார் உள் ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். யோகேஷ்குமார் (24) உயிரிழந்தது குறித்து தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள தே.மூனாண்டிபட்டியில் வசிக்கும் அவரது பெற்றோர் ஜெயராஜ், நாகரத்தினம் தம்பதிக்கு தெரிவிக்கப்பட்டது. திருமணமாகாத யோகேஷ்குமாருக்கு சங்கீதா (31), சர்மிளா (28) ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர். உசிலம்பட் டியில் உள்ள கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த அவர் கடந்த 2019- ஆம் ஆண்டில் ராணுவப் பணியில் சேர்ந்தார்.
யோகேஷ்குமாரின் உடல், தே.மூனாண்டிபட்டிக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட உள்ளதாக தேவாரம் காவல் துறையினர் தெரிவித்தனர் . ராணுவ மரியாதையுடன் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் செய்து வருகின்றனர். இவரது உயிரிழப்பால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
பஞ்சாப் ராணுவ முகாமில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடல் டெல்லியில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலைய வந்தடைந்தது. பஞ்சாப் மாநிலம் பத்தின்டா ராணுவ முகாமில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.அதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ்குமார் ( 23) .இவரது உடல் இன்று காலை 8 மணிக்கு டெல்லி விமானத்தில் மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது.பிறந்த ராணுவ வீரர் யோகேஷ் குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றப்பட்டு தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நடந்த இறுதிச்சடங்கில்,தேனி மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், பல் வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் யோகேஷ்குமாரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.