மதுரையில் பாஜக சார்பில் ரத்த தான முகாம்

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது

Update: 2023-09-23 12:30 GMT

மதுரையில் பாஜக சார்பில்  நடைபெற்ற  ரத்த தான முகாம்.

பிரதமர் நரேந்திரமோடியின் எழுபத்து மூன்றாவது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.

மதுரை மாநகர் பாஜ.க அலுவலகத்தில் மாவட்ட த்தலைவர். மகாசுசீந்திரன் தலைமையிலும் மாவட்ட பொது செயலாளர்கள். ராஜ்குமார், ஜோதி,மணிவண்ணன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவர். வக்கீல். முத்துக்குமார், மகளிரணி மாவட்ட தலைவர் இசக்கிமீனா, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர். அப்பாஸ், பொருளாதார பிரிவு மாவட்டத் தலைவர். வடமலையான் முன்னிலையிலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரத்ததானம் வழங்கப் பட்டது.

சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர்கள் சாம்சரவணன், கால்வாரி தியாகராஜன், சிரில்ராயப்பன், பொருளாதார பிரிவு மாநில துணைத் தலைவர்தேவ்ஜில், மாவட்ட மகளிரணி துணை தலைவர் செல்வி கிருஷ்ணன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்டச் செயலாளர்கள் சிவசக்தி, ரேணுகா, கார்த்திகேயன், நல்லமணி, ஜெயகுமார், கிருஷ்ணன் ஆகியோர் ரத்ததானம் அளித்தனர்.

Tags:    

Similar News