மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

நான்கு மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக 3 மாநிலங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவனியாபுரத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்;

Update: 2023-12-04 17:18 GMT

இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்.

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் நான்கு மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியது.

இதில், சத்தீஸ்கர் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றது. தெலுங்கானாவில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மூன்று மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாஜகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில், பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். அவனியாபுரத்தில், நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட முன்னாள் தலைவர் சுந்தர் , அவனியாபுரம் மண்டல் செயலாளர் கருப்பையா, பாரதிராஜா , சுந்தர் ரமேஷ், காளி, மணிகண்டன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அவனியாபுரம் மந்தை திடலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருப்பரங்குன்றம், பகுதியில், நடைபெற்ற விழாவில், பாஜக மாவட்ட ஓபிசி அணி செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்.

Tags:    

Similar News