மதுரை அருகே காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்
மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக கட்சி பிரமுகர்களை, அவனியாபுரம் போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றதைக் கண்டித்து, அவனியாபுரம் காவல் நிலையத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள பிர்தெளஸ் பள்ளிவாசல் மண்டபத்தில், தடைசெய்யப்பட்ட மோடி டாக்குமென்ரி திரைப்படத்தை திரையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக வினரை, அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
மோடி டாக்குமென்ட்ரி திரையிட எதிர்ப்பு தெரிவித்து மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சசிகுமார், அவனியாபுரம் மேற்கு மண்டல் செயலாளர் கருப்பையா உள்பட 7 பேரிடம் போலீஸார் விசாரணண மேற்கொண்டனர்.
மோடி, ஆவண படத்தை வெளியிட்டவரை தடுக்க சென்ற பாஜக மாவட்ட தலைவர் சசிகுமார், பாரதிராஜா, சோலை மணிகண்டன், ஜெயகணேஷ், கருப்பையா மதன், தமிழ்செல்வி, உள்ளிட்ட ஏழு பேரிடம் அவனியாபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாரதிய ஜனதா கட்சியினரை எதிர் தரப்பினர் தாக்கியதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் மற்றும் கட்சி பெண் பிரமுகர் உட்பட சிலர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.