ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை: அட, இதற்குத்தானா?

மகாகவி பாரதியாருக்கு நூற்றாண்டு விழா அறிவித்த, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2021-09-11 12:45 GMT

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை. 

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு அஞ்சலி செலுத்த சென்னையில் இருந்து மதுரை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை மாநிலத்தில் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: இன்று முக்கிய தலைவர்களின் நினைவு நாள். மகாகவி பாரதியார் மற்றும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக, மத்திய நிதியமைச்சர் நாளை ஓட்டப்பிடாரம் செல்கிறார். அதேபோல், இன்று மத்திய இணையமைச்சர் முருகன் மற்றும் நான் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவு தினத்திற்கு செல்கிறோம்

வேளாண்மை சட்டங்கள் குறித்து யாரும் இதுவரை பாதிப்படைந்த கூறவில்லை. தமிழகத்தில், மண்டி வைத்து வியாபாரம் செய்கின்றனர். கேரளாவில் அந்த மாதிரி எதுவும் கிடையாது. பீகாரில் மண்டி வியாபாரம் செய்கின்றார்கள். ஆகவே ,அவர்கள் பாதிப்படை கிறார்கள் என்பதற்காக, வேளாண்மை சட்டங்களை எதிர்க்கிறார்கள். சிஐஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எந்தவித முகாந்திரமும் இல்லை.

காங்கிரஸ் தலைவர் அழகிரி, என்ன கூறுவதென்று தெரியாமல் கூறுகின்றார். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவி, நியமனத்தில் எந்தவித உள்நோக்கமும் இல்லை .இதற்கு முன்னதாக, பல்வேறு காலக் கட்டங்களில், பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆளுநராக பணிபுரிந்துள்ளனர். அதிமுகவுடன் பாஜக உறவு,  அண்ணன் தம்பி போல் உள்ளது. மகாகவி பாரதியாருக்கு நூற்றாண்டு விழா  நடத்துவதாக அறிவித்த, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று, அண்ணாமலை கூறினார்.

Tags:    

Similar News