மதுபான விற்பனையை வைத்துதான் அரசு இயங்குகிறது: அண்ணாமலை பேச்சு
கடன் வாங்குவதில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது, முதலிடத்திற்கு வந்துள்ளது.
தமிழகத்தில், டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துதான், அரசு நடைபெறுகிறது என்றார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை .
மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் அவர் மேலும் கூறியதாவது:திமுக ஆட்சி மக்களுக்கு எந்த அளவுக்கு எதிராக உள்ளது என்பது தெரியும்.தமிழகம் சிறந்து விளங்குவதற்கு காரணம் சௌராஷ்டிரா மக்கள். விசைத்தறி நெசவாளர்களுக்கு வாரியம் அமைப்பதாக திமுக வாக்குறுதி கொடுத்து ஆனால், அமைக்கவில்லை. கடன் வாங்கும் மாநிலங்களில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் மாறி உள்ளது. கடன் வாங்குவதில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது, முதலிடத்திற்கு வந்துள்ளது. மதுவிலிருந்து வரும் வருமானத்தை வைத்து ஆட்சி நடத்தி வருகிறது. திமுக அமைச்சர் பி டி ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசி 4 மாதம் ஆகிவிட்டது
2014 இல் 24 கோடி பெண்கள் மட்டுமே வங்கி கணக்கு வைத்திருந்தனர் ஆனால், தற்போது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 79 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.2014 இல் பதினோரு சதவீதம் பள்ளிகளில் மட்டுமே பெண்களுக்கு தனி கழிப்பிடங்கள் இருந்தது ஆனால், தற்போது 100 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பிடங்களை மோடி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
ரஃபேல் விமானத்தில் தற்போது பெண்கள் பயணித்திருக்கிறார்கள். பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளது. அதை நடைமுறைப்படுத்து வதற்கு மோடி தேவைப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தத் தொகுதி எம்பி மாணிக்கம் தாக்கூர் தமிழகத்தில் இருக்க மாட்டார் அவர் எப்போதும் டெல்லியில் தான் இருப்பார். அவரை நீங்கள் யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள்.மதுரை மற்றும் விருதுநகர் எம்பிகளால் எந்த பிரயோஜனமும் இல்லை.
காவிரி விவகாரத்தில் இரண்டு எம்பிக்களும் வாயை திறக்கவில்லை. இவர்களை ,விட பெரிய டுபாக்கூர் முதல்வர் ஸ்டாலின். அவர் பெங்களூர் சென்றபோது 32 டிஎம்சி தண்ணீர் ஜூலை மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்கச் சொல்லி இருந்தோம். அப்போது கேட்காமல் இப்போது ஏதோ செய்து கொண்டிருக்கிறார்..
இந்தியாவில் ஈடுபட்டு இல்லாமல் 10 ஆண்டு காலம் 2ஜி ஊழலில் ஈடுபட்டவர்கள், தனிநாடு வேண்டும் என்று கேட்டவர்கள், காஷ்மீரை தனி நாடு என்று சொன்னவர்கள்.இந்த கூட்டணியை பொறுத்தவரை இந்தியாவை சூறையாடியவர்கள் இணைந்துள்ளளனர். 68 சதவீத பெண்களுக்கு ,நகை கடன் தள்ளுபடி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். 7000 கோடியில் 2500 கோடி மத்திய அரசின் பணம் அதை கொடுக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.