மதுரையில் நல வாழ்வு மையம் கட்ட பூமி பூஜை: மேயர் தொடக்கம்

மதுரை மாநகராட்சி நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்தார்

Update: 2022-06-03 08:00 GMT

மதுரை மாநகராட்சி நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்தார்

மதுரை மாநகராட்சி நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை  மேயர் இந்திராணி பொன்வசந்த் தொடக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 5 கோவலன் நகர் பகுதியில் புதிய நலவாழ்வு மையம் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் .சிம்ரன்ஜீத்சிங் காலோன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம், பொது சுகாதார திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் புதிதாக 62 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ரூ.16.16 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதிகளுக்கு 12 நலவாழ்வு மையங்கள் அமைக்கப் பட உள்ளது. இன்றைய தினம் வார்டு எண்.78 கோவலன் நகரில் தேசிய நகர்ப்பற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள நலவாழ்வு மையத்திற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

தொடர்ந்து அருள்தாஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கூடுதல் கட்டிட பணியினையும் மருத்துவமனைக்கு வரும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள், மருத்துவ பரிசோதனை, மருத்துவ வளாக சுகாதாரமாக வைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சுவிதா,சரவணபுவனேஸ்வரி, நகரப்பொறியாளர் லெட்சுமணன், உதவி ஆணையாளர்கள் தட்சிணாமூர்த்தி, அமிர்தலிங்கம், நகர்நல அலுவலர் மரு.ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர்மகேஸ்வரன், உதவிப் பொறியாளர்கள்ஆரோக்கிய சேவியர், ராஜசீலி, சுகாதார அலுவலர் விஜயகுமார், மாமன்ற உறுப்பினர்கள் தமிழ்செல்வி, மகா லெட்சுமி உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News