மாற்றுத் திறனாளிகளுக்கு மானியத்துடன் வங்கிக் கடன்: மதுரை ஆட்சியர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பயனடைய மதுரை மாவட்டத்தில் வங்கிக்கடன் மேளா நடத்த மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப் பட்டுள்ளது;

Update: 2023-11-14 09:15 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா

மதுரை மாவட்டத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் மானியத்துடன் கூடியசுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் வழங்குவதற்கான "வங்கிக் கடன் மேளா"-வில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தகவல் தெரிவித்தார்.

தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான சுயவேலை வாய்ப்பு வங்கிக் கூடன் வழங்கும் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பெறும் கடன் தொகையில், மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிக பட்சமாக ரூ.25,000/- மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பயனடைய மதுரை மாவட்டத்தில், "வங்கிக்கடன் மேளா" நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப் பட்டுள்ளது.  இந்த கடன் மேளாவில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் உள்ளிட்ட வங்கியாளர்கள் கலந்து கொண்டு தகுதியுடைய பயனாளிகளை தேர்வு செய்யவுள்ளனர்.

இந்த வங்கிக்கடன் மேளாவில் 18 முதல் 45 வயதிற்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளது. தொழில் செய்ய முன்வரும், கடன் உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் (1. தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் UDID கார்டு அசல் மற்றும் நகல்,

2.ஆதார் கார்டு நகல், 3. ரேசன்கார்டு நகல், 4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2) உள்ளிட்ட சான்றுகளுடன் வரும் 22.11.2023 புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் நடைபெறும் "வங்கிக்கடன் மேளா'-வில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News