மதுரையில் வங்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: போலீஸார் விசாரணை
மதுரை விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அவனியாபுரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் அமைந்துள்ளது;
மதுரையில் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எ.மில் நடந்த கொள்ளை முயற்சி தொடர்பாக அவனியாபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மதுரை விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அவனியாபுரம் பகுதியில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்த ஏ.டி.எம். மிஷினை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்திலிருந்து காவல்துறைக்கு கொடுக்கபட்ட தகவலின் அடிப்படையில், காவல்துறை விரைந்து செயல்பட்டதால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம் .மையத்தில் கொள்ளை முயற்சி குறித்து தடயங்களை சேகரித்த அவனியாபுரம் குற்றப்புலனாய்வு காவல் ஆய்வாளர் விமலா தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மிகவும் பரபரப்பாக மக்கள் போக்குவரத்து மிகுந்து காணப்படும் மதுரை விமான நிலைய சாலையில் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.