வாடிப்பட்டி அருகே பாலம்மாள் ஆலய கும்பாபிஷேகம்..!

தாதம்பட்டியில் பாலம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது

Update: 2024-06-11 14:01 GMT

தாதம்பட்டியில் பாலம்மாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 

 வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி தாதம்பட்டி மேட்டுப் பெருமாள் நகர் பாலம்மாள், எல்லம்மாள், சிங்காரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

முதல் நாள் மாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை ஆச்சாரியார் அழைப்பு, விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், அக்னி பிரதிஷ்டை, வாஸ்து ஹோமம் கும்ப பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இரண்டாம் நாள் காலை 5.30 மணி முதல் 8.20 மணி வரை அக்னி ஆராதனை, உக்த ஹோமம்,பூரணா குதி, கோ பூஜை பாத்திரா தானம், கும்பங்கள் யாக கலசத்தில் இருந்து புறப்பாடு நடந்தது.

8.25க்கு கோபுர கலசத்தில் அழகர் கோயில்,ராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரால் கும்பா பிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப் பட்டது. 9மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன் ஏற்பாடுகளை, விழா குழுவினர் மாமுடி வாரு, முடை மலை வாரு கோத்திர பங்காளிகள், மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News