மதுரை அருகே மழையால் இடிந்த அய்யனார் கோவில் மண்டபம்: அதிகாரிகள் ஆய்வு

மதுரை அருகே பெய்த கன மழையால் அய்யனார் கோவில் மண்டபம் இடிந்து விழுந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-11-30 16:01 GMT

தொடர் மழையில் இடிந்து விழுந்த பனையூர் அய்யனார் கோவில் மண்டபம்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, பனையூர் கிராமத்தில் சபரிமலை சாஸ்தா அய்யனார் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் கடந்த 2001ஆம் ஆண்டு திருமண மண்டபம் கட்டப்பட்டு கோவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

தற்போது, பெய்து வரும் தொடர் மழையில், கோவிலில் உள்ள திருமண மண்டபம் இடிந்து முற்றிலும் சேதமானது.

இதுகுறித்து, தகவலறிந்து வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கட்டிடத்திலிருந்து இடிந்த பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

இந்த திடீர் விபத்தினால் எந்தவித உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News