அவனியாபுரம் கண்மாய் புறம்போக்கு ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார்
மதுரை மாநகராட்சி 88 வார்டு சோலை அழகுபுரம் இபி அலுவலகம் பின்புறம் உள்ள அவனியாபுரம் கண்மாய் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு;
பைல் படம்
அவனியாபுரம் கண்மாய் புறம்போக்கு நிலத்தில் 529 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ள மதிமுக பிரமுகர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மதுரை மாநகராட்சி 88 வார்டு சோலை அழகுபுரம் இபி அலுவலகம் பின்புறம் உள்ள அவனியாபுரம் கண்மாய் புறம்போக்கு பகுதியில், மதுரை மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடத்தில் வீடு மற்றும் கடைகள் கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ள மதிமுக பிரமுகர் மனைவிக்கு 2014ஆம் ஆண்டு மதுரை மாநகராட்சி ஆணையர் நோட்டீஸ் அனுப்பி வைத்தார்.
அதன் பின்னரும், மதிமுக பிரமுகர் தொடர்ந்து தற்போது 2021 ஆம் ஆண்டு வரை ஆக்கிரமிப்பு செய்து அந்தப் பகுதியில் ஏராளமான வீடு, கடைகள், வணிக வளாகங்களை அமைத்து வாடகைக்கு விட்டு வசூல் செய்து வருகிறார்.மாநகராட்சிக்கு சொந்தமான பல லட்சம் மதிப்புள்ள சொத்தை பறிமுதல் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர், மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.