அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த சுமூகமாக நடத்த வேண்டும்: அதிமுக எம்எல்ஏ கோரிக்கை
ஒருமித்த கருத்துடன் கிராம கமிட்டி ஜல்லிக்கட்டு நடத்துவதா அரசே போட்டியை நடத்துவதா என விரைந்து முடிவு எடுக்க வேண்டும்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை சுமூகமாக தீர்வு கண்டு அரசு நடத்த வேண்டும் எனராஜன் செல்லப்பா எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றத்தில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் மதுரை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது . இதில், மதுரை மாநகராட்சியில் உள்ள இருபத்தி ஒன்பது வார்டுகளுக்கு கடந்த 8 மாதங்களாக எந்த வித பணியும் நடைபெறவில்லை என கூறி வரும் 4ம் தேதி செவ்வாய்க்கிழமை மதுரை பெருமாள் கோயில் அருகில் டி. எம் கோர்ட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியதாவது: மதுரை மாநகராட்சி நிர்வாகம் கடந்த எட்டு மாதங்களாக எந்தவித பணியும் செய்யவில்லை. புதைசாக்கடை மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் போன்றவற்றில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. உடனடியாக மதுரை மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு பொது மக்கள் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட சார்பில் பெருமாள் கோவில் அருகிலுள்ள அடிஎம் கூட்டு அருகே வரும் 4-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது
புதிதாக ஆட்சி அமைத்த திமுக அரசு சென்னைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. மதுரையின் வளர்ச்சிக்கு எந்தவித திட்டப்பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை அரசின் கவனத்தைக் கொண்டு செல்லும் வகையில் வே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியை துரிதமாக செய்ய வேண்டும் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை சீரமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். மோடி வரும் நாளன்று விமான நிலைய ஆலோசனைக் குழு துணைத் தலைவர் என்ற முறையில் நான் பிரதமர் அவர்களிடம், மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பது குறித்து கோரிக்கை அளிக்க உள்ளேன்.
மேலும், எனது தொகுதிக்கு கீழ்வரும் அவனியாபுரம் பகுதியில் தை மாதம் முதல் நாளன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மதுரையில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் அவனியாபுரம், அலங்காநல்லூ,ர் பாலமேடுபகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு குறிப்பிடத்தக்கது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நான் மேயராக இருந்த பொழுது அரசே ஏற்று நடத்த ஏற்பாடு செய்தேன். அதுபோல் , நிரந்தர வாடிவாசல் அமைக்கும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து நிறைவேற்ற வேண்டும். தற்பொழுது, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக தென்கால் பாசன விவசாயிகள் மற்றும் கிராம கமிட்டி இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது . இதற்கு அரசு விரைந்து சுமூகத்தீர்வு காண வேண்டும்.
சில ஆண்டுகள் தென்கால் பாசன விவசாயிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினர்.இரு தரப்பையும் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் கிராம கமிட்டியாரோ அல்லது அரசோ ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் குறுகிய காலங்களில் அது இன்னும் 12 நாட்களே உள்ள சூழ்நிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள்அழைக்கழிக்கப்படுவார்கள். இது போன்ற குளறுபடியை தவிர்க்க, அரசு உடனடியாக தலையிட்டு விரைவாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா. கூட்டத்தில், மேலூர் எம்எல்ஏ பெரிய புள்ளான் , ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட எம்ஜிஆர் அணி செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.