Auto Dashed To Police Injured மதுரையில்ஆட்டோ அசுர வேகத்தால் போலீசார்களு்க்கு பலத்த காயம்

Auto Dashed To Police Injured செக்போஸ்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது ஆட்டோ மோதியது. இதனால் பலத்தகாயமடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.;

Update: 2023-10-29 08:16 GMT

பணியில் இருந்த காவலர்கள் மீது ஆட்டோ மோதி விபத்து. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Auto Dashed To Police Injured

மதுரை அவனியாபுரம்,சின்ன உடைப்பு அருகே உள்ள தற்காலிக செக்போஸ்ட்டில் போலீசார்மருதுபாண்டியர் குருபூஜை தினத்தை ஒட்டி ,கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக வந்த ஆட்டோ ஒன்று, திடீரென செக்போஸ்ட்டில் இருந்த போலீசார் மீது மோதியது. இந்த விபத்தில் செக் போஸ்ட் கண்காணிப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வேலாயுதம், கிங்சன் ஜேக்கப், காவலர் கண்ணன் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை, உடன் பணிபுரிந்த சக காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் உடனே அனுமதித்தனர்.

சிகிச்சை பெறும் போலீசாரை, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி.அருண்..மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ,ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என போலீசாருக்கு நம்பிக்கை தெரிவித்தனர்.

இது போலீஸாருக்கு நம்பிக்கையும் நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.மதுரை மாவட்டத்தில் அதிக வேகமாகவும், சாலை விதிகளை மதிக்காமல் பல ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாலைகளில் நடுவே நிறுத்தி ஆட்களை ஏற்றுவது, சாலையிலே செல்லும்போது, எந்த வித சமிக்ஞைகள் செய்யாமல் ஆட்டோவை நிறுத்துவது, அதிக ஆட்களை ஆட்டோவில் ஏற்றுவது, அரசு சிட்டி பஸ் போல பஸ் நிறுத்தத்தில் ஆட்டோவை நிறுத்தி கூவி பயணிகளை அழைப்பது, அதிக வேகமாக ஆட்டோவை. இயக்கி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து போக்குவரத்து வட்டார அலுவலர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், விதியை மீறி பெர்மிட் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்துவதுடன்,அதிக பயணிகளை ஏற்றும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News