கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது: ஓ.பி.எஸ்
தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உள்ளபடியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்;
கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையின்போது நடைபெற்ற தகராறு தாக்குதல் கண்டிக்கத்தக்கது. என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது, நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது மேலும் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் சிங்கப்பூர் பயணம் குறித்த கேள்விக்கு:தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் முடிந்த பிறகு எந்தெந்த முதலீடுகள் ஈர்க்கப்பட்டது என்பதன் விவரம் வந்த பிறகு பதில் சொல்கிறேன்.
செங்கோல் விவகாரம் குறித்த கேள்விக்கு:தமிழ்நாட்டின் பாரம்பரியமான செங்கோல், நாடாளுமன்றத்தில் வைப்பதில் உள்ளபடியே தமிழக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், அதை முழுமையாக நான் வரவேற்கிறேன்.
கரூரில் வருமான வரித்துறையினர் சோதனையின்போது நடைபெற்ற தகராறு குறித்த கேள்விக்கு: அந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறேன் என ஒ பன்னீர் செல்வம் கூறினார்.