மதுரை அருகே செல்போன் தர மறுத்த மருத்துவர் மீது தாக்குதல்

மதுரையில் நடைபெற்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 11 பேரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;

Update: 2023-04-14 15:00 GMT

பைல் படம்

பைக்காராவில் செல்போன் பேச தர மருத்துவரை தாக்கியவர் கைது

மதுரை .பைக்காரா முத்துராமலிங்கபுரம் பாலநாகம்மாள் கோவில்தெருவை சேர்ந்தவர் காசி59.அதே பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை 50.காசியிடம் இருந்த செல்போனை பேசுவதற்காக சின்னத்துரை கேட்டுள்ளார்.இதற்கு அவர் மறுத்து விட்டார்.இதனால் ஆத்திரமடைந்த சின்னதுரை காசியை ஆபாசமாக பேசித்தாக்கினார்.இந்த சம்பவம் குறித்து காசி, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரை தாக்கிய சின்னதுரையை கைது செய்தனர்.

முன் விரோதத்தில் தாக்குதல் அண்ணன் தம்பி கைது

மதுரை திடீர்நகரை சேர்ந்தவர் பாபு என்ற தக்காளிபாபு(45.).இதே பகுதியை சேர்ந்தவர்கள் வாசுதேவன் மகன் பாலாஜி(25,). முத்துப்பாண்டி(26.).இவர்கள் அண்ணன் தம்பிகள்.இவர்களுக்கும் தக்காளிபாபுவுக்கும் முன்விரோதம் இருந்தது.இந்த நிலையில் அதே பகுதியில் ரேசன்கடை அருகே சென்ற தக்காளிபாபுவை வழிமறித்த அண்ணன்தம்பிகள் சரமாரியாக அவரை தாக்கினர்.இந்த சம்பவம் குறித்து தக்காளிபாபு திடீர்நகர் போலீசில் புகார்செய்தார்.போலீசார் வழக்குப்பதிவுசெய்து அவரைத்தாக்கிய அண்ணன் தம்பிகள் பாலாஜி,முத்துப்பாண்டியை கைது செய்தனர்.

குடும்பப் பிரச்னை காரணமாக இருதரப்பினர் இடையே மோதல்:ஆறு பேர் கைது

விருதுநகர் மாவட்டம், முடுக்கன்குளம் இலுப்பைக்குளத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் ஐயப்பன்(21.).  மதுரை பி.பி.குளம் முல்லை நகர் நேதாஜி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(55.) இவர்கள் உறவினர்கள். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மருதுபாண்டியர் தெருவில் அய்யப்பனை , சேகரும் அவரது மகன்களான விக்னேஷ் பழனிவேல் ஆகியோர் வீடு புகுந்து ஆபாசமாக பேசி தாக்கிய பேசியுள்ளனர். இதில் இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டனர். ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் .இந்தச்சம்பவம் குறித்து அய்யப்பன் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சேகர் அவரது மகன்கள் விக்னேஷ் , பழனிவேல் மூவரையும் கைது செய்தனர்.சேகர் கொடுத்த மற்றொரு புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமமூர்த்தி, மகன்கள் அய்யப்பன் வேல்முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மனைவியுடன் கருத்து வேறுபாடு: லோடுமேன் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை சிந்தாமணி ரோடு வாழைத்தோப்புவை சேர்ந்தவர் கருப்பசாமி(53 ).இவர் லோடுமேன் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவர் மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் பிரிந்து வாழந்தனர். இந்த சம்பவத்தால் மனமுடைந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது லோடுமேன் கருப்புசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தாய் முத்துப்பிள்ளை கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை:  இரண்டு பேர் கைது

மதுரை ஸ்காட் ரோடு மீனாட்சி பஜாரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக திலகர் திடல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் திடீரென்று அந்த பகுதியில் இருந்த கடைகளில் ஆய்வு செய்தார் .அப்போது அங்கு கடைகளில் வைத்து விற்பனை செய்த அண்ணா நகர் மருதுபாண்டியர் தெரு காஜாமைதீன் மகன் நாகூர் ராஜா மற்றும் கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் இரண்டாவது தெரு அப்துல்ஜாப்பர்(73 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்கள் இருவரிடமும் பல்வேறு விதமான தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அண்ணா நகரில் கார் கண்ணாடியை உடைத்து அடுத்தடுத்து திருட்டு

மதுரை முனிச்சாலை ரோடு இஸ்மாயில் புரம் ஏழாவது தெருவை சேர்ந்தவர் முத்துமகன் ஸ்ரீநாத்(30.) இவர் தான் ஓட்டிச்சென்ற காரை கேகே நகர் மால் ஒன்றின் முன்பாக நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. காருக்குள் வைத்திருந்த ஏடிஎம் கார்டு ஒன்று, செல்போன்கள் இரண்டு, பணம் ரூ. 6700 ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்று விட்டார். இந்த திருட்டு குறித்து ஸ்ரீநாத் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார்.

மற்றொரு திருட்டு..

பைபாஸ் ரோடு ஷாலினி தெரு துரைச்சாமி நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் ஆதித்யா விக்னேஷ்(31 ).இவர் அண்ணா நகரில் சினிமா தியேட்டர் எதிரே பெட்ரோல் பங்கில் தனது காரை நிறுத்தி இருந்தார். பின்னர் அவர் வந்து பார்த்தபோது காரின் பின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.காருக்குள் வைத்திருந்த எட்டு சாவிகள் திருடு போயிருந்தது.இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்து திருடும் ஆசாமியைதேடி வருகின்றனர்.

வெவ்வேறு சம்பவங்களில் பாம்பு கடித்து முதியவர் உள்பட இரண்டு பேர் பலி 

மதுரை பேரையூர் பி சங்கரலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(77.).  இவர் கூலித்தொழிலாளியாவார். சம்பவத்தன்று இவரது வீட்டில் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்தது. இதில்சம்பவ இடத்திலேயே முதியவர் கிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து அவருடைய மகன் அழகுமலை டி. இராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலைமானில் ஒருவர் பலி

சக்கிமங்கலம் நடுத்தெருவை சேர்ந்தவர் நாராயணன்(58.). இவரும் கூலி வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டின் முன்பாக தோட்டத்தை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதில் அவர் தலைக்கு விஷமேறி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி சுசீலா சிலைமான் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News