மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் அறிவிப்பு

மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-01-16 17:04 GMT

மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பரிசாக வழங்கப்படவுள்ள கார்.

மதுரை அருகே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக கார் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் சிறந்த காளைக்கு கார் பரிசாக வழங்கப்ட உள்ளது. அதேபோன்று, ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்ககாசு வழங்கப்படும்.

திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

அதே போல் மாடுகளை பிடிக்கும் வீரர்களுக்கும் தலா ஒரு தங்க காசு வழங்கப்பட உள்ளது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News