வாடிப்பட்டியில் அம்பேத்கர் நினைவு தினம்:விசிக வினர் அஞ்சலி
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பாக, டாக்டர் அம்பேத்கார் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது;
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர், ஒன்றிய விடுதலைசிறுத்தைகள் கட்சி சார்பாக டாக்டர் அம்பேத்கார் நினைவுநாள் பஸ்நிலையம் முன்பு அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் பொறியாளர் தமிழ்நிலவன் தலைமை வகித்தார்.திமுக பேரூர் செயலாளர், பேரூராட்சித் தலைவர் மு.பால்பாண்டியன், பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக், முன்னாள் பேரூர்செயலாளர் மு.பா.பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட நிர்வாகிகள் விடுதலைவீரன், தளபதி, கம்யூனிஸ்ட்கட்சிகளின் நிர்வாகிகள் மூர்த்தி, அனிபா, ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரூர் செயலாளர் அ.கா. அரசு வரவேற்றார். இந்தநிகழ்ச்சியில், டாக்டர் அம்பேத்கார் படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில், தி.மு.க. நிர்வாகிகள் முரளி, கார்த்திக், வி.சி.க சுரேஷ், யுவராஜ், சிறுத்தைபாலன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.முடிவில், வாடிப்பட்டி வளவன் நன்றி கூறினார்.
இந்திய அரசியலமைப்பின் தந்தை’ எனப் போற்றப்படும் பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ஆம் தேதி தனது 65வது வயதில் காலமானார்