மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் அன்னதானம் வழங்கல்
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் 4 முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடிய பாஜக மகளிர் அணியினர்;
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றியை தொடர்ந்து முதியவர்களுக்கு உணவு வழங்கி பாஜக மாவட்ட மகளிர் அணியினர் கொண்டாடினர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் பகுதியில் உள்ள தனியார் முதியோர் காப்பகத்தில் நான்கு மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பாஜக புறநகர் மாவட்ட மகளிர் அணியினர் உணவு வழங்கி கொண்டாடினர்.
திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரம் பகுதியில், உள்ள மகாத்மா முதியோர் காப்பகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, உத்திரபிரதேசம், கோவா, உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து ,மதுரை புறநகர் பாஜக மாவட்ட மகளிரணி தலைவி தங்கராணி தலைமையில் முதியவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கி கொண்டாடினர். இதில், மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.