உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் உதயநிதி

Alanganallur Jallikattu உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். காளைகள் சீறிப்பாய்ந்தன.;

Update: 2024-01-17 07:00 GMT
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சர் உதயநிதி

அலங்காநல்லுாரில் பாரம்பரிய ஜல்லிக்கட்டினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். அருகில் அமைச்சர்  மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள். 

  • whatsapp icon

Alanganallur Jallikattu

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது பல்வேறு காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் பலர் காலையில் அடக்கி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுகளை பெற்றனர்.

அமைச்சர்கள்  மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை அரசு கூடுதல் செயலர் மங்கத் சர்மா, ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள்  தளபதி, தமிழரசி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.அதைத் தொடர்ந்து பல்வேறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.காளைகள் சீறிப்பாய்ந்ததில், பலர் காயமடைந்தனர்.பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென் மண்டல காவல்துறைத் தலைவர் நரேந்திரன் நாயர், டிஐஜி, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. தலைமையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பங்கேற்ற சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு கார் மோட்டார் சைக்கிள் தங்கக் காசுகள் ஆகியவை  பரிசு பொருளாக வழங்கப்படும் மேலும் இந்த ஜல்லிக்கட்டு பல்வேறு வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு கண்டு ரசிப்பர். வெளிநாட்டு பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு காண தனியாக அரசு சார்பில் மேடைகள் அமைத்து தரப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் கவரும் வகையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் பெரிய திரைகளில் வெளியிடப்பட்டு, வந்தது காளைகள் மருத்துவ பரிசோதனை ஜல்லிக்கட்டில் களம் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News