மதுரையில் எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் ஊழியர்கள் நலச்சங்கத்தினர் போராட்டம்
மறு சீரமைப்பு என்ற பெயரில் நம்பிக்கை மையங்கள் மூடுவதை கைவிட வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மதுரை மண்டலம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதில் ,அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்பிக்கை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், மறு சீரமைப்பு என்ற பெயரில் நம்பிக்கை மையங்களை மூடுவதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,இந்த உண்ணாவிரத போராட்டம் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில்நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில், மாநிலத் துணைத்தலைவர் மணிவாசகம் தலைமையில் நடந்தது .இதில், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ,தேனி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்கள் பெண்கள் மற்றும் இந்த உண்ணாவிரதம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் திட்டப் பிரிவு 1993 இல் உருவாக்கப்பட்டது மற்றும் 1994 ஆம் ஆண்டில், இது நாட்டிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமாக (டான்சாக்ஸ்) சங்கங்கள் சட்டத்தின் கீழ் ஒரு சங்கமாக பதிவு செய்யப்பட்டது. மாநில சுகாதார செயலாளர் சங்கத்தின் தலைவராகவும், ஐஏஎஸ் அதிகாரி உறுப்பினர் செயலாளராகவும், திட்ட இயக்குனராகவும் உள்ளனர்.
TANSACS ஆனது இந்திய மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒரு பிரிவான தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) மூலம் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது. TANSACS இன் திட்டங்கள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NACP) வழிகாட்டுதல்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இது அதன் நான்காவது கட்டத்தில் உள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்புக் கட்டுப்பாட்டு அலகுகளால் (DAPCU) திட்டங்கள் மற்றும் தலையீடுகளுக்கான மேற்பார்வை செய்யப்படுகிறது.