நீட் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் - தொல் திருமாவளவன்

நீட்டிற்கு சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவித்து. வெளியே அதிமுக நடிக்கிறது. தொல் திருமாவளவன் குற்றச்சாட்டு.;

Update: 2021-09-14 14:32 GMT

விசிக தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை மாநில சுயாட்சி நாளாகவும், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாகும், அறிவித்த முதல்வர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நான் நன்றி தெரிவிக்கிறேன்.

வி.சி. கட்சி முன்னோடி நிர்வாகி மலைச்சாமியின் நினைவு நாளுக்கு மரியாதை செலுத்த சென்னையில், இருந்து மதுரை வந்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியது: நீட் மசோதா தடை சட்டம் மூலம் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய துணிச்சலான முடிவு. நீட் மசோதா மாணவச் செல்வங்களை காவு வாங்குகிறது. அதனால், இந்த நீட் தேர்வு தடை மசோதாவை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மன அழுத்தத்திற்கு ஆளான, கனிமொழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இந்த ஆண்டு இந்த நீட்தேர்வு இரண்டு இளம் உயிர்களை காவு வாங்கியுள்ளது. மாணவ செல்வங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மோடி அரசு மேலும், இதுபோன்ற உயிர்களை காவு கொடுக்காமல், மாணவச் செல்வங்களை காப்பாற்றக் கூடிய வகையில் நீட் தேர்வை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

செப்டம்பர்-15-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கங்களோடு சேர்ந்து பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் டெல்டும்டே உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி, ஊபா போன்ற பயங்கரவாத தடை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று மனித சங்கிலி அறப்போராட்டம் காரைக்குடியில் நடைபெற உள்ளது. இதில், நானும் கலந்து கொள்ள உள்ளேன். மாநில சுயாட்சி நாளாக அண்ணா பிறந்தநாளை ஆண்டு தோறும் கடைபிடிக்கிறோம். பெரியார் பிறந்த நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சமூக நீதி நாளுக்கான உறுதிமொழி ஏற்க உள்ளோம்.

திமுகவின் மசோதாக்கள் அனைத்தும் தீர்மானமாகவே இருக்கும் என்று அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு:

அண்ணாமலை பொருத்தவரை திமுக விற்கு எதிராக பேசுவதாக நினைத்து தமிழக மக்களுக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார். ஊரக உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வாய்ப்புள்ள இடங்களில் விசிக சார்பாக போட்டியிடுவோம். நீட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிமுக நடிக்கிறது. இது அவர்களுடைய இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.

Tags:    

Similar News