மதுரை பெருங்குடியில் அதிமுக பொன்விழா: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கட்சி கொடியேற்றி,எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா உருவ படங்களுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Update: 2021-10-17 10:30 GMT

மதுரை பெருங்குடியில் நடைபெற்ற  அதிமுக பொன்விழாவில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள்

மதுரை பெருங்குடியில் அதிமுக பொன்விழாவை கொண்டாடிய அதிமுகவினர்

அதிமுக 50 ஆண்டு தொடக்க பொன்விழா நாளான இன்று சென்னையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கட்சியினர் கலந்து கொண்டு கட்சியின் பொன்விழாவைக் கொண்டாடினர்.

இந்நிலையில், மதுரை விமானநிலையம் செல்லும் சாலையில் உள்ள பெருங்குடியில் நடைபெற்ற விழாவில், திருப்பரங்குன்றம் ஒன்றிய முன்னாள் சேர்மன் முனியாண்டி தலைமையில், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய  துணைச் செயலாளர் பாலமுருகன், பன்னீர்செல்வம் ,கருப்பையா மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு, கட்சி கொடியேற்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ படங்களுக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Tags:    

Similar News