தமிழக அரசைக் கண்டித்து அதிமுக எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம்
ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்;
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, திமுக நிர்வாகியை தாக்கியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் மீது 2 வழக்குகள் பதியப்பட்டது. அவருக்கான ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில், 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.